ETV Bharat / state

‘போலீஸாருக்கு ரெகுலராக பணம் கொடுத்து வருகிறேன்’ - ஆடியோவால் அதிர்ச்சி

author img

By

Published : Mar 6, 2020, 12:06 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளிடையே ஏரியா பிரிப்பதில் தகராறு ஏற்படும் ஆடியோவில் போலீஸாருக்கு ரெகுலராக பணம் கொடுத்து வருகிறேன் என்று ஒருவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராய வியாபாரிகள் பேசும் ஆடியோ
கள்ளச்சாராய வியாபாரிகள் பேசும் ஆடியோ

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பொறுப்பேற்ற காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம், மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவதில் அதிதீவிரம் காட்டி வருகிறார்.

இவர் பொறுப்பேற்ற பின்னர் கள்ளச்சாராய வியாபாரிகள் அதிக அளவில் பிடிபடுகின்றனர். இருந்தபோதிலும், பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனை களைகட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

தற்போது, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்குள்பட்ட குத்தாலம் காவல் சரகத்திற்குள்பட்ட அசிக்காடு பகுதியைச் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி ஏசுராஜ் என்பவர், அதேபகுதியைச் சேர்ந்த பெண் வியாபாரி வாசுகி என்பவரிடம் பேசும் ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவி வைரலாகி வருகிறது.

கள்ளச்சாராயம் விற்கும் இடத்தகராறு தொடர்பாக, காவல் துறையினருக்கு மாமூல் கொடுத்தது தொடர்பாகவும் இரண்டு சாராய வியாபாரிகள் பேசும் ஆடியோ அப்பகுதியில் வைரலாகி வருவதால் காவல் துறையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் வியாபாரி வாசுகி பேசுகையில், “கஸ்டமர் அதிகம் வரும் கால்வாய் குட்டை பகுதியில் நான் மட்டுமே சாராயம் விற்பேன். இதற்காக, காவல் துறையினருக்கு ரெகுலராக பணம் கொடுத்து வருகிறேன். என் அப்பாவும், நானும் அப்பகுதியில் ஐந்து வருடத்திற்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்று வருகிறோம். ஏற்கெனவே, இதுசம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு, என் வீட்டை உடைத்துள்ளீர்கள். என் ஏரியாவுக்கு வராதீங்க. நீங்க எங்களை காட்டிக்கொடுக்காதீங்க, நாங்களும் உங்கள காட்டிக்கொடுக்க மாட்டோம்” எனக் கேட்டுக்கொண்டார்.

அதற்கு கள்ளச்சாராய வியாபாரி ஏசுராஜ் பேசுகையில், “நீ ஸ்பெஷல் பிராஞ்ச் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாய். அதனை அவர்கள் என்னிடம் கூறினார்கள்” எனத் தெரிவித்தார். இறுதியில், “இன்னும் ஓர் இரு வருடங்களில் நான் கல்யாணம் பண்ணிக்கொண்டு போய்விடுவேன், அதற்குப் பிறகு நீயே அந்த இடத்தில் வியாபாரம் செய்துகொள்” என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய வியாபாரிகள் பேசும் ஆடியோ

ஆனால், ஏசுராஜ் மசியாமல், “நான் பல இடங்களில் வியாபாரம் செய்பவன். உன்னால் முடிந்தால் அந்த இடத்தில் வியாபாரம் செய்துபார்” என்று சவால் விட்டுள்ளார். இந்த ஆடியோ அப்பகுதியில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'எவ்வளவு கவனிக்கிறாங்க' - மிரட்டிய ஆர்.ஐ.யை அலறவிட்ட வி.ஏ.ஒ.! ஆடியோ வைரல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.