ETV Bharat / state

பூம்புகார் சுற்றுலா தலத்தில் வெளவால்களால் துர்நாற்றம்... ஆய்வுசெய்யாமல் திரும்பிய சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர்

author img

By

Published : Aug 16, 2022, 10:14 PM IST

பூம்புகாரில் வெளவால்களால் ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் உள்ளிட்ட மற்ற இடங்களை ஆய்வு செய்யாமல் மதிப்பீட்டுக்குழுவினர் பாதியிலேயே திரும்பிச்சென்றனர்.

பூம்புகார் சுற்றுலா தளத்தில் வவ்வால்கள் துர்நாற்றம்... ஆய்வு செய்யாமல் திரும்பிய சட்டமன்ற மதிப்பீட்டு குழு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே வரலாற்று புகழ்மிக்க பூம்புகார் சுற்றுலா தலத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர். பூம்புகார் சுற்றுலா தலத்தை உலக சுற்றுலா தலத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கான பணிகளை செய்திட தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் குழு உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்லூர் ராஜூ, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அம்மன் அர்ஜுனன், அருள், ராமச்சந்திரன், ஈஸ்வரன், பாலசுப்ரமணியன், ராஜகுமார் ஆகியோர் பூம்புகார் சுற்றுலா தலத்தில் உள்ள சிலப்பதிகார கலைக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா. முருகன், சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் முகப்பு மற்றும் சுற்றுப்புறப்பகுதி முழுவதும் செடி, கொடிகள் மண்டி காடு போல் வளர்ந்திருப்பதையும், கலைக்கூடத்தில் உள்ளே கலை பொக்கிஷங்கள் உடைந்து சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி இருந்ததையும், அதிக அளவு வெளவால்கள் தங்கி கடுமையான துர்நாற்றம் வீசியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த மதிப்பீட்டுக்குழுவினர் சிலப்பதிகார கலைக்கூடத்தை இவ்வாறு பராமரிக்காமல் வைத்துள்ளதற்கு சுற்றுலாத்துறை அலுவலரிடம் கண்டனத்தை தெரிவித்தனர்.

மேலும் 100 நாள் வேலை திட்டத்திலாவது கலைக்கூடத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த அறிவுறுத்தினார். இந்தச்சம்பவத்தால் பூம்புகாரில் உள்ள பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம் உள்ளிட்ட மற்ற இடங்களை ஆய்வு செய்யாமல் மதிப்பீட்டு குழுவினர் திரும்பிச்சென்றனர். முன்னதாக சீர்காழி அருகே எருக்கூர் நவீன அரிசி ஆலை உள்ளிட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பூம்புகார் சுற்றுலா தலத்தில் வெளவால்களால் துர்நாற்றம்... ஆய்வுசெய்யாமல் திரும்பிய சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர்

இதையும் படிங்க:டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் ஹெலிகாப்டரில் வந்து அஹோபில மடத்தில் வழிபாடு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.