ETV Bharat / state

லட்சம் கேட்ட மருத்துவ ஊழியர் விவகாரம்: மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

லட்சம் கேட்ட அரசு மருத்துவ ஊழியர் விவகாரம் குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் பதிலளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

லட்சம் கேட்ட மருத்துவ ஊழியர் விவகாரம்
லட்சம் கேட்ட மருத்துவ ஊழியர் விவகாரம்
author img

By

Published : Apr 27, 2021, 10:12 AM IST

நாகை: திட்டச்சேரியைச் சேர்ந்த முருகவள்ளி கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர், பல்வேறு பரிசோதனைகளுக்காக முருகவள்ளியை சக்கர நாற்காலியில் வைத்து மருத்துவமனை பெண் ஊழியர் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆண் குழந்தை பிறந்திருப்பதால் முருகவள்ளியிடம் பணம் கேட்டபோது தர மறுத்ததால், அவர் வண்டியை அலட்சியமாகத் தள்ளியதில், முருகவள்ளி நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் எடுத்த காணொலி சமூக வலைதலங்களில் வைரலாகப் பரவிய நிலையில், தினசரி நாளிதழில் செய்தி வெளியானது.

இந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

வழக்கை விசாரணைக்கு எடுத்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், இந்தச் சம்பவம் குறித்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் துறை இயக்குநரும், நாகை மாவட்ட இணை இயக்குநரும் இரண்டு வாரத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

இதையும் படிங்க: IPL 2021 PBKS vs KKR: டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த கொல்கத்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.