புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு தனிச் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானைத் தரிசிக்க, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தரும் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகிறது. இக்கோயிலில் இந்தாண்டிற்கான பிரமோற்சவ விழா வருகிற 27ஆம் தேதி முதல் கொடியேற்றம் செய்து தொடங்கவேண்டியது.
ஆனால், கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் இக்கோயிலில் நடைபெற வேண்டிய அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாக அலுவலர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!