ETV Bharat / state

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 464-ஆம் ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 464ஆவது ஆண்டு சந்தனக்கூடு ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சந்தனக்கூடு ஊர்வலம்
சந்தனக்கூடு ஊர்வலம்
author img

By

Published : Jan 24, 2021, 10:31 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி, கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 464ஆவது கந்தூரி விழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினத்தில் இருந்து நாகூர் வரை சென்றது.

சந்தனக்கூடு ஊர்வலம்

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடுக்கு, வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பூக்களை தூவி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து, நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.

இதையும் படிங்க: ’வரும் ஆண்டு 5,000 பேரை ஹஜ் யாத்திரை அனுப்ப முயற்சி’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.