நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஜெயின் கோயில் கொடியேற்ற விழாவையொட்டி, சும்மதிநாத பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில், கோயிலின் கோபுர உச்சியில் அமைந்துள்ள பிரதான கொடியை கோயில் நிர்வாகி ரமேஷ் ஏற்றி வைத்தார்.
கடந்த ஆண்டு ஏற்றிய கொடியை அகற்றி அதனை கீழே விடும்போது, அக்கொடியை மடியில் ஏந்துபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அப்பகுதி ஜெயின் சமூகத்தினரின் நம்பிக்கையாக உள்ளது.
இதையொட்டி, கீழே விழும் கொடியை தரையில் நின்றிருந்த குழந்தையில்லாத பெண்கள் மடியில் ஏந்திப் பிடித்தனர். இவ்விழாவில் ஜெயின் சமூகத்தினர் திரளானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.