ETV Bharat / state

பருத்திக்கு உரிய விலைபெறும் புதிய முறை அறிமுகம் - Cotton growers

நாகை: மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு பருத்தியை உரிய விலைபெறும் புதிய முறையை மாவட்ட வேளாண்மை குழு செயலாளர் அறிமுகப்படுத்தினார்.

வேளாண் விற்பனை குழு செயலாளர் வித்யா
வேளாண் விற்பனை குழு செயலாளர் வித்யா
author img

By

Published : Jul 2, 2020, 3:27 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த ஆண்டு பருத்தி நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள வேளாண்மை விற்பனை மையங்களில் கிடங்கு கொள்ளளவைவிட அதிகமான பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

இந்திய பருத்தி கழகத்தினர் வருகையால் ரூ.5000க்கும் மேல் விலை கிடைத்தாலும், பல விவசாயிகளுக்கு உற்பத்தியான பருத்தியை பாதுகாப்புடன் விற்க முடியாமல் தவித்துவருகின்றனர். மேலும், கிடங்கு கொள்ளளவைவிட அதிகமாகவரும் பருத்தி மூட்டைகளை வெளியில் வைத்து விடுவதால், மழை நேரத்தில் பாதிக்கப்படுவதோடு, கிடங்கில் உள்ள மூட்டைகள் மிகக் குறைந்த விலைக்கே விற்பனை ஆகிறது.

இந்நிலையில், செம்பனார்கோவிலில் ஆயிரம் குவிண்டால் கிடங்கு வசதி உள்ளது. ஆனால் நான்காயிரம் குவிண்டால் கொண்டுவந்துள்ளனர். அதேபோன்று, குத்தாலத்தில் நான்காயிரம் குவிண்டால் கிடங்கு வசதி உள்ளது. ஆனால் ஏலத்திற்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து எட்டாயிரம் குவிண்டால் வரை விவசாயிகள் கொண்டுவந்தனர்.

மேலும், திறந்தவெளியில் வைத்திருக்கும் பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்தால் இந்திய பருத்தி கழகத்தினர் கொள்முதல் செய்வதில்லை. இதனால் தனியார் வியாபாரிகள் தரமான பருத்தியைக்கூட குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். எனவே குடோன் வசதி செய்துதர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு வேளாண் விற்பனைக் குழு செயலாளர் வித்யா, பருத்தி எடைபோடும் பணியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், “ இந்த ஆண்டு அதிக அளவில் பருத்தி உற்பத்தியாகி உள்ளதால், ஒரேநேரத்தில் விற்பனைக்கு வரும்போது இடப்பற்றாக்குறையால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே இதனைப் போக்குவதற்காக ஒவ்வொரு மையத்திலும் கிடங்கு வசதிக்கு ஏற்ப விவசாயிகளுக்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தி, கிடங்கு அளவிற்கு மட்டுமே பருத்தி வரவழைக்கப்படும். இதில் உள்ளூர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், விற்பனையாகும் மூன்று தினங்களுக்கு முன்பு இந்தத் தொகை தரப்படும், மற்ற விவசாயிகள் அடுத்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரலாம். இந்த முறையை பின்பற்றினால் விவசாயிகள் நல்ல விலையைப் பெறலாம். இன்னும் ஓரிரு வாரங்களில் பருத்தி சாகுபடி முடிவுக்கு வந்துவிடும்” என்றார்.

இதையும் படிங்க: இந்தியன் வங்கி ஊழியருக்கு கரோனா: அச்சத்தில் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.