மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூம்புகார் சுற்றுலாத் தலத்தில் மதிவேந்தன் ஆய்வுமேற்கொண்டார். கலைக்கூடம், பாவைமன்றம், நிலாமுற்றம், பளிங்கு மண்டபம், சங்கு மற்றும் சிப்பி விடுதி, காவிரி சங்கமம் உள்ளிட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த அவர், "கடந்த 10 ஆண்டுகளாகப் பூம்புகாரில் எந்தச் சீரமைப்புப் பணிகளும் செய்யாமல் பழுதடைந்துள்ளன. தற்போது பூம்புகார் சுற்றுலா மையத்தைப் புதுப்பித்து மெருகேற்றும் வகையில் பிரமாண்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்திர திருவிழா எப்போது?
அதேபோல் தடைப்பட்டுள்ள பாரம்பரிய திருவிழாவான இந்திர திருவிழா இந்த ஆண்டும் கரோனா தொற்று காரணமாக நடத்த முடியாது. வரும் ஆண்டுகளில் நடைபெற முதலமைச்சரிடம் ஆலோசித்து இந்திர விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பூண்டி மாதா சிலை உடைப்பு: திருவள்ளூரில் பதற்றம்