மயிலாடுதுறையில் 74ஆவது சுதந்திர தினம் தனியார் பள்ளி ஒன்றில் விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள் கரோனா காலத்தில் முன் களப் பணியாளர்களின் அயராத உழைப்பை பாராட்டும் வகையில் நகராட்சி தூய்மைப் பணியாளரை வைத்து தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்கள்.
பள்ளி முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பின்பற்றினர்.
இதையும் படிங்க: சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலித்த சென்னை விமான நிலையம்!