மயிலாடுதுறை: செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்” சென்னையில் 2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை குறைகூறினார்கள்.
தற்போது 4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் எல்லாம் அமைத்து தற்போது வெள்ளபாதிப்பு அதிகம். மழைநீர் வடிவதற்கு 3 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கடந்த 2015 பாதிப்பின் போது தன்னார்வளர்கள் அதிக அளவில் உதவி செய்தனர். ஆனால் தற்போது அதிக அளவில் தன்னார்வளர்கள் உதவி செய்யவில்லை.
வெள்ள பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் எதுவும் பேசவில்லை. சூர்யா, கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்கள் நிதி வழங்கினர். நடிர்கள் பொதுசேவை செய்வது அவர்களது விருப்பம். எம்.பி.கனிமொழி தனது வீட்டில் சமைத்து உணவு வழங்கியதோடு நிவாரண பொருட்கள் வழங்கினார். அதுபோல் சொந்த பணத்தில் எத்தனை அமைச்சர்கள் இது போன்று செய்தார்கள்.
அவர்களிடம் இல்லாத பணமா? இதுவரை பதவிக்கே வராத ஒருகட்சி செய்த உதவிகளை கூட யாரும் செய்யவில்லை. என் வீட்டில் வெள்ளம் வந்த புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதற்கு நிறைய அச்சுறுத்தல் வந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் 1500 ரயில் பயணிகள் சிக்கியிருந்தனர். 150 பேரை மட்டும் அரசு வாகனத்தில் அழைத்து சென்றனர். மீதிமுள்ள 1350பேர் 2 நாட்கள் சிரமப்பட்டனர். வெள்ளம் வந்தபோது மின்தடை ஏற்பட்டது ஆனால் மின்சார கட்டணம் மட்டும் குறையவில்லை.
படிப்பதற்கு டார்கெட் வைக்கசொன்னால் குடிப்பதற்கு அரசு டார்கெட் வைப்பது வேதனை அளிக்கிறது. மதுவால் குற்றசம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அரசே மதுவிற்கு இலக்கு நிர்ணயித்து விற்பனை செய்து வருகிறது . இதற்காக காலையில் 7 மணிக்கு கடைதிறக்கிறோம் என்று சொல்வது வேதனையளிக்கிறது.
அரசியலுக்கு வருவதாக கூறி ரஜினி ஏமாற்றிவிட்டார். மழைவெள்ள பாதிப்பிற்கு கூட ரஜினி குரல் கொடுக்கவில்லை. அவரது படம் ரிலீசானால்தான் குரல் கொடுப்பார். மக்கள் பிரச்னையை பேசாமல் மத்திய, மாநில அமைச்சர்கள் தரம் தாழ்ந்து பேசுவது வேதனை அளிக்கிறது.
மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு மத்திய மாநில அரசுகள் சண்டைபோடுவதைதான் வேலையாக வைத்து கொண்டுள்ளனர். மத்திய நிதிஅமைச்சர் புள்ளிவிபரத்தோடு சொல்லிவிட்டார்கள். மாநில அரசும் முறையான நிவாரண நிதிகேட்க வேண்டும். கொடுக்க முடியாத நிதியை கேட்டுவிட்டு மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “சும்மா பிராங்க் பண்ணேன்” இணையத்தில் வைரலான வீடியோவிற்கு நடிகர் விஷால் விளக்கம்!