ETV Bharat / state

சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்குப் பணிகள் தொடக்க விழா: ஆதீனங்கள் பங்கேற்பு - etv bharat

சீர்காழி சட்டநாதர் கோயில் குடமுழுக்குப் பணிகள் தொடக்க விழாவில் தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினர்.

கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா
கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா
author img

By

Published : Aug 28, 2021, 10:04 AM IST

மயிலாடுதுறை: சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குள்பட்ட சட்டநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டினார் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரர், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்குமேல் உள்ள மூன்றாவது தளத்தில் முத்து சட்டைநாதர் எனவும் மூன்றுவிதமாக சிவன் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்.

64 பைரவர்கள் தனிச் சன்னதியில் உள்ள இந்த ஆலயம் பைரவ ஸ்தோத்திரம் ஆகும். இந்த ஆலயத்தில் 1991ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.

அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி குடமுழுக்கிற்கான திருப்பணிகள் தொடங்கின. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 26) இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.

தருமபுரம் ஆதீனம் பேட்டி

நேற்று (ஆகஸ்ட் 27) காலை சிறப்பு வழிபாடு, பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தின் ஈசான மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு தருமபுரம் ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரர் தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடமுழுக்குப் பணிகள் தொடக்க விழா

இந்தத் திருப்பணியானது சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வைகோ வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.