நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை அடுத்த சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (29). இவர் சீர்காழியில் உள்ள டெல்கிவரி என்ற கொரியர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த சில நாள்களாக கொரியர் நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களுக்கு கொடுக்கப்படும் ரொக்கப்பணத்தை கையாடல் செய்துவந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் மேலாளர் அரவிந்துக்கு தெரியாமல் இருந்த நிலையில், வரவு செலவு கணக்கு பார்த்த அரவிந்த், மூன்று லட்சம் ரூபாயை கலைச்செல்வன் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேலாளர் அரவிந்த் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேற்பார்வையாளர் கலைச்செல்வனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: