ETV Bharat / state

லஞ்சம் வாங்கியதாக பத்திரப்பதிவு அலுவலர்கள் கைது!

நாகை: சீர்காழி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.42,400 மற்றும் ஆவணங்களைப் பறிமுதல் செய்து எழுத்தர்கள், பத்திரப் பதிவு அலுவலர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

In Nagai reserve officers arrested who looted bribery

author img

By

Published : Oct 15, 2020, 2:35 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பத்திரப் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரம் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கப்படுவதாக நாகை லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நாகை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மனோகரன், ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்டோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ. 42,400 மற்றும் தொடர்புடைய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலர் (பொ) நாகநந்தினி, எழுத்தர்கள் ரவிச்சந்திரன், வல்லவன், பாலகுரு உள்ளிட்ட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க...அனுபவமே பாடம் - ரஜினிகாந்த் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.