ETV Bharat / state

சம்பா பயிர்களைத் தாக்கும் எலிகள்: கரிசனம் காட்டுமா வேளாண்த்துறை? - சம்பா பயிர்களை தாக்கும் எலிகள்

நாகை: சம்பா பயிர்களை கதிர் வரும் நேரத்தில் எலிகள் நாசப்படுத்தி வருவதால், வேளாண்த்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பா பயிர்களை தாக்கும் எலிகள்: கரிசன் காட்டுமா வேளாண்த்துறை?
சம்பா பயிர்களை தாக்கும் எலிகள்: கரிசன் காட்டுமா வேளாண்த்துறை?
author img

By

Published : Dec 19, 2019, 3:17 AM IST

நாகை மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களான செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பா பயிர்களில் கதிர் வரும் இந்த சூழலில் பயிர்களை எலிகள் கடித்து நாசப்படுத்தி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

மேலும், நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் ஆட்களுக்கு கூலி தந்து எலி கிட்டிவைத்து எலிகளைப் பிடித்து வருகின்றனர். தற்போது சம்பா நெல் சாகுபடியில் களை எடுத்தல், உரம் இடுதல் போன்ற பணிகளுக்கு செலவு செய்துள்ள நிலையில் தற்போது கதிர் விடும் சம்பா நெற்பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்வதால், தங்களுக்கு இந்த ஆண்டு பெரும் மகசூல் குறைவு ஏற்படும். இதனால் கடன் பெற்று பயிர் செய்த தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சம்பா பயிர்களைத் தாக்கும் எலிகள்: கரிசன் காட்டுமா வேளாண்த்துறை?

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் வேளாண்த் துறை மூலம் நடத்தப்படும் கோடை கால ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை. இதனால் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாகக் கூறுகின்றனர் விவசாயிகள்.

இது போன்ற துயர் தொடராமல் இருக்க வரும் காலங்களில் எலிகளை ஒழித்து, அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு வேளாண்த் துறை மூலம் கோடைக்காலங்களில் தீவிர எலி ஒழிப்பு திட்டத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க... உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

Intro:சம்பா பயிர்களை கதிர் வரும் நேரத்தில் எலிகள் நாசப்படுத்தி வருவதால்
விவசாயிகள் கவலை. வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.Body:சம்பா பயிர்களை கதிர் வரும் நேரத்தில் எலிகள் நாசப்படுத்தி வருவதால்
விவசாயிகள் கவலை. வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

நாகை சுற்றுவட்டார கிராமங்களான செல்லூர், பாலையூர், பெருங்கடம்பனூர், சிக்கல் ,கீழ்வேளூர் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பா பயிர்கள் கதிர் வரும் இந்த சூழலில் பயிர்களை எலிகள் கடித்து நாசப்படுத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

மேலும், கிட்டிவைத்து எலிகளை பிடிக்க நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் ஆட்களுக்கு கூலி தந்து எலிகளை பிடித்து வருவதாகவும், தற்போது சம்பா நெல் சாகுபடியில் களை எடுத்தல், உரம் இடுதல் போன்ற பணிகளை செலவு செய்து மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது கதிர் விடும் சம்பா நெற்பயிர்களை எலிகள் கடித்து வெட்டி நாசம் செய்வதால் விவசாயிகள் தங்களுக்கு இந்த ஆண்டு பெரும் மகசூல் குறைவு ஏற்பட்டு கடன் பெற்று பயிர் செய்த தங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் வேளாண்துறை மூலம் நடத்தப்படும் கோடை கால ஒருங்கிணைந்த எலிஒழிப்பு திட்டம் சரிவர செயல்படுத்தப்படாததால் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாக குற்றம் சாட்டும் விவசாயிகள், இது போன்ற துயர் தொடராமல் இருக்க வரும் காலங்களில் எலிகளை ஒழித்து அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, தமிழக அரசு வேளாண்துறை மூலம் கோடைக்காலங்களில் தீவிர எலி ஒழிப்பு திட்டத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.