மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கேனீக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - மோகனசுந்தரி தம்பதி. இவர்களது மகள் பா. தாரா அக்ஷரா (7). இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது மூன்றரை வயதிலிருந்து யோகாசனத்தை ஆர்வமுடன் கற்று வரும் மாணவி தாரா அகூரா, யோகா கலையின் கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்யும் வல்லமை மிக்கவராக திகழ்ந்து வருகிறார்.
உடலை வில்லை போன்று வளைத்தும் பந்தை போன்று சுழற்றியும் பல்வேறு ஆசனங்களை செய்யும் மாணவி டிம்பா ஆசனம், விருச்சிக பத்மாசனம், கண்ட பேருண்ட ஆசனா, வீரஹனுமாசனம், துருவாசனா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு ஆசனங்களை செய்து மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், இம்மாணவி விருச்சிகாசனத்தில் கால்களை பயன்படுத்தி கோப்பைகளில் அதிவேகமாக முட்டைகளை வைத்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தேள் வடிவில் உடலை வளைத்து விருச்சிகாசனத்தில் ஆறு கண்ணாடி கோப்பைகளில் ஆறு முட்டைகளை எடுத்து வைத்து 7.88 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனையை படைத்தார்.
இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவைச் சேர்ந்த மாணவி 18.28 விநாடிகளிலும் 2021 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த வாங்இனோவ் என்பவரின் 11.8 வினாடிகளில் செய்த சாதனையை தாரா அக்ஷரா முறியடித்துள்ளார்.
வருகின்ற 2028 ஆம் ஆண்டு சர்வதேச விளையாட்டு (ஒலிம்பிக்) போட்டியில் யோகா சேர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பில் இந்தியாவிற்காக யோகாவில் தங்கப் பதக்கத்தை பெற்றுத்தருவேன் என்று திருவாரூரைச் சேர்ந்த யோகா ஆசிரியர் கண்ணன் என்பவரிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவி தாரா அக்ஷரா 7.88 விநாடிகளில் தான் செய்யத கின்னஸ் சாதனையை 5 விநாடிகளில் செய்வதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
மாணவி செய்த யோகாசனங்களை கண்டு பிரமிப்படைந்த மாணவர்கள் பல்வேறு கலை பயிற்சி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். தாரா அக்ஷராவின் கனவு நினைவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: புதுவை பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு.. கோடை விடுமுறையை அறிவித்த அமைச்சர்!