நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, கேந்திர வித்யாலயா பள்ளிகளின் ஆறாம் வகுப்பு வினாத்தாளில் ஜாதி மதரீதியான கேள்விகள் இடம் பெற்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த பதிவிற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அப்படி எந்த கேள்வியும் இடம் பெறவில்லை. இதிலிருந்து திமுக, சமூக வலைதளங்களில் பொய்களை மட்டுமே பரப்புவதை வேலையாகக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
மேலும் பேசிய அவர், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடன் நிறுத்தப்படுவதாக பொய்யான தகவல்கள் பரவிவருவது அதிர்ச்சியளிக்கிறது.
இதுபோன்ற பொய்களை பரப்புவர்கள் சமூகவிரோதிகள் என்று கருதி அவர்களை ஒதுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய திட்டத்தைப் போலவே, முறைசார தொழிலளர்கள்,விவசாயிகளுக்காக மாதம் மூன்றாயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அரசு அறிவிக்கவுள்ளது என்றார்.