கடந்த அக்டோபர் 28ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கி பல மாவட்டங்களில் பரவலாகப் பெய்துவருகிறது. கடந்த சில தினங்களாக நாகை மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலைமுதல் மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை பெய்துவருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. மேலும் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழை!