ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு; நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள்: ஹெச்.ராஜா - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பை நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள் என பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

'நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள்'
'நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள்'
author img

By

Published : Nov 5, 2021, 5:59 PM IST

நாகப்பட்டினம்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் பரிபூரணம் அடைந்த ஷேத்திரம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. அதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.5) திறந்து வைத்தார்.

அதன் காணொலி காட்சி நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா கூறியதாவது, "மத்திய அரசு பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு 10 ரூபாயும் விலையைக் குறைத்துள்ளது.

அதேபோல் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் அரசு என்று கண்ணீர் வடிக்கும் திமுக, மக்களுக்காக இதேபோல் விலைக் குறைப்பை செய்ய வேண்டும்.

மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறினால், மாநில அரசை ஊராட்சி அரசு என்று தான் கூற வேண்டும்.

'நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள்'

நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்பார்கள்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அவரது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை கூட முழுமையாகத் தெரியவில்லை.

இவருக்கு தெரிந்ததெல்லாம் கோயில்களில் உள்ள தங்கத்தை எடுத்து உருக்குவது மட்டுமே. இதுவரை கோயில்களில் எடுக்கப்பட்ட தங்கத்தின் விவரத்தை மக்கள் முன்னிலையில் காண்பிக்க வேண்டும்.

பா.சிதம்பரத்திற்கு பொருளாதாரத்தைப் பற்றி என்ன தெரியும். மத்திய அரசின் விலைக் குறைப்பு நடவடிக்கையை நல்ல புத்தி உள்ளவர்கள் வரவேற்க வேண்டும். இதனை விமர்சிப்பவர்கள் எதிர்க்கட்சிகள் அல்ல; மக்களின் எதிரிகள்" என்றார்.

இதையும் படிங்க: பல சிரமங்களுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு - பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.