நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாலூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சதீஷ் என்பவர் 10 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பருத்திச் செடிகள் வெட்டிக்கிளிகளின் தாக்குதலால் சேதமடைந்தன.
நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் பருத்திச் செடிகளில் உள்ள இலைகள், பூக்கள், காய்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தின. உடனே இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மைத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து செம்பனார்கோவில் துணை வேளாண்மை அலுவலர் உமா பசுபதி தலைமையில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து வேம்பு கலந்த அகார்டிராக்டின் மருந்து கரைசலைத் தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். பருத்திச் செடிகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகள் உள்ளூர் ரக வெட்டுகிளிகள் என்பதால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் கடன் வசூலிக்கக் கூடாது!