பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த கலையழகி (26) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இவரது தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் இல்லத் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கலையழகி உயிரிழந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த திருவெண்காடு காவல் துறையினர், கலையழகி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதுடன், கொலை குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கலையழகியை, அவரது பெரியப்பா மகன் (அண்ணன்) ரகு என்பவர் கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலையழகி அலைபேசியில் அடிக்கடி உரையாடியதை, ரகு கண்டித்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியிடம் வரம்புமீறிய ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது!