ETV Bharat / state

அரசுப்பள்ளி மாணவர்கள்தான்... ஆனா நாங்க வேற லெவல்! - ரோபோ

நாகை: அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களைப் போல ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் காணொலி சமூக வலைதளங்களில் வேமாகப் பரவிவருகிறது.

govt.school students
author img

By

Published : Aug 1, 2019, 11:16 AM IST

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கேவரோடை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் அவருக்ளுக்கு பாடம் கற்பிக்க இரண்டு ஆசிரியர்களும் உள்ளனர்.

இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் இப்பள்ளியை ஆய்வு செய்வதற்காக தொடக்கக் கல்வி அலுவலர் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியில் நுழைந்தவுடன் பள்ளியின் பசுமையான சுற்றுச்சூழலை கண்டு வியப்படைந்த அலுவலருக்கு மேலும் பல வியப்புகளை அப்பள்ளியில் அவரால் காண முடிந்தது.

அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள், ரோபோ குறித்த ஒரு உரையாடலை மிக சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் காட்சியைக் கண்ட தொடக்கக்கல்வி அலுவலர் அப்படியே மெய்சிலிர்த்துப்போனார்.

அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் காட்சி

அந்த உரையாடலை தனது கைப்பேசியில் பதிவு செய்து அதனை ஊக்குவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தக் காணொலியானது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில உரையாடலை கண்டு பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும் என்றால் தனியார் பள்ளியைத்தான் நாட வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்தெறிந்துள்ளது கேவரோடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. அப்பள்ளிக்கு ஈடிவி பாரத்தின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!

Intro:நாங்க அரசுப்பள்ளி மாணவர்கள்.
ஆங்கிலப் பள்ளிக்கு சவால்விடும் வகையில் செயல்படும் அரசு பள்ளி.Body:நாங்க அரசுப்பள்ளி மாணவர்கள்.

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த கேவரோடை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் 25 பேரும் மாணவ, மாணவிகளாக, இரண்டு ஆசிரியர்களுடன் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு வழக்கமான ஆய்வு செய்வதற்காக கொள்ளிடம் ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர் பாபு சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளியில் நுழைந்தவுடன் பள்ளியின் பசுமையான சுற்றுச்சூழலை கண்டு வியப்படைந்த தொடக்க கல்வி அலுவலருக்கு மேலும் பல வியப்புகளை அப்பள்ளியில் அவரால் காண முடிந்தது.

தற்போது ஆங்கில மோகத்தால் தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களுக்கு ஆங்கிலம் என்பது தனியார் பள்ளிகளில் மட்டுமல்ல அரசுப் பள்ளிகளிலும் தரமாக பயிற்றுவிக்கப்படும் என்பதற்கான ஒரு சான்று அப்பள்ளியில் தொடக்கக் கல்வி அலுவலர் கண்டுள்ளார்.

அப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு மாணவர்கள், ரோபோ குறித்த ஒரு உரையாடலை மிக சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் காட்சி ஆய்வுக்கு சென்ற தொடக்கக்கல்வி அலுவலரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த உரையாடலை தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து அதனை ஊக்குவிக்கும் விதமாக சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில உரையாடலை கண்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

ஆங்கிலம் கற்க தனியார் பள்ளி தான் சிறந்தது என்ற தவறான எண்ணத்தில் தங்கள் பிள்ளைகளை பல்லாயிரம் செலவு செய்து தனியார் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்களுக்கு அவர்களின் தவறை உணர்த்த இந்த மாணவர்கள் ஒரு பாடமாக அமைந்து உள்ளார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.