தமிழ்நாடு அரசால் 11ஆவது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, செம்பனார்கோவில், குத்தாலம், கொள்ளிட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 49 பள்ளிகளைச் சேர்ந்த 4,031 மாணவிகளுக்கான மிதிவண்டிகள், 2,845 மாணவர்களுக்கான மிதிவண்டிகள் என 6,876 மிதிவண்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அவாண் (AVON) நிறுவனத்திடமிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன.
மிதிவண்டிகள் வழங்குவதற்காக உதிரி பாகங்கள் பொருத்தும் பணி இரவு, பகலாக மயிலாடுதுறையில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், இரண்டு மாதங்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்குவதற்காக வேலைகள் நடைபெற்று வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க:மகன் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதுவதற்காக 85 கி.மீ., மிதிவண்டி மிதித்த தந்தை - ஒரு நெகிழ்ச்சி கதை!