நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இடையேயான மூன்று நாட்கள் நடைபெறும் அறிவியல் கண்காட்சி நாகையில் இன்று தொடங்கியது. தனியார் கல்லூரி மற்றும் நாகை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை நாகை கோட்டாட்சியர் பழனிக்குமார் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 217 பள்ளிகளில் இருந்து 5200 மாணவ, மாணவிகள் பங்கேற்று 503 படைப்புகளை வெளிக்காட்டி, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கண்காட்சியில் வேளாண் அறிவியல், தானியங்கி போக்குவரத்து, காற்றாலை மின்சாரம், காந்தவியல் மின்சாரம், ராக்கெட் ஏவுதல் போன்ற கண்களைக் கவரும் பல்வேறு அறிவியல் படைப்புகள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியின் 3 நாட்கள் நிறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே தனியார் மயம் - தொழிலாளர்கள் போராட்டம்