ETV Bharat / state

மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு கரோனா நிவாரண நிதி வேண்டும்!

author img

By

Published : May 18, 2021, 12:09 PM IST

நாகப்பட்டினம்: பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இழந்த மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் வேலையிழந்த ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தவது தொடர்பாக ஆலோசனைகள் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- கரோனா தொற்றால் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு அரசு, அனைத்து பள்ளிகளையும் மூடியது. இதனால் 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர்கள், அலுவலர்களை 50 சதவிகிதம் பேர் பணிக்கு வந்தால் போதும் என்று கூறி பாதி சம்பளம் கொடுத்தனர்.

இதனால் ஆசிரியர்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். 10, 12ஆம் வகுப்பில் 98 சதவிகிதம் தேர்ச்சியளித்த ஆசிரியர்களின் வாழ்க்கை மிக மோசமாக மாறியுள்ளது. கடந்த அதிமுக அரசு தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை பற்றி கவலைப்படவில்லை. கரோனா 2ஆவது அலையால் இந்த ஆண்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர் வேலையிழந்து குடும்பம் நடத்துவதற்கு கூட பணம் இல்லாமல் உள்ளது.

கடலூரில் தனியார் பள்ளி ஆசிரியை வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பல லட்சம் ஆசிரியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு வருடமாக சரியாக சம்பளம் இல்லாததால் வறுமையில் வாடுவதால் பாதி சம்பளமாவது வழங்க வேண்டும் அல்லது அரசு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை

அரசு ஆசிரியர் பணிக்குரிய வயது வரும்பு 57 என்று இருந்ததை அதிமுக அரசு 40 வயதாக குறைத்ததை ரத்து செய்து வயது வரம்பை 57ஆக மீண்டும் உயர்த்த வேண்டும், ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்று ஒருலட்சம் பேர் தனியார் பள்ளிகளில் வேலைபார்த்து வருகின்றனர். அவர்களை காலியாக உள்ள அரசு பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என்றார்.

அதிமுக ஆட்சியில் அரசு பணியாளர் தேர்விலும் டெட் (TET) தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். தங்கள் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்புவதாகவும் தமிழ்நாடு அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறினார்.

இதையும் படிங்க:பள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர் பதவியில் ஐஏஎஸ் அலுவலரை நியமிப்பதா? - அரசு அலுவலர் சங்கங்கள் கொந்தளிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.