மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, நாகப்பட்டினம் சட்டப்பேரவைஉறுப்பினர் தமீமுன் அன்சாரி அலுவலகம் மார்ச் 12ஆம் தேதி பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பூட்டி சீல் வைக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் அறைக் கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக வெளிப்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின்பேரில், அங்கு விரைந்துசென்றகாவல் துறையினர் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் திருடு போய் உள்ளதா என விசாரணை நடத்திவருகின்றனர்.
நகரின் மையப்பகுதியில் தேர்தல் அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் தமீமுன் அன்சாரி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் திருட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.