ETV Bharat / state

சீர்காழி, மின்னல் தாக்கியதில் 4 பேர் காயம்

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள்
author img

By

Published : Nov 4, 2019, 11:35 AM IST

நாகப்பட்டினம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மேலவல்லம் கிராமத்தில் இடி தாக்கியதில் அதேக் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, அவரது மனைவி எழிலரசி, மகள் நிஷாந்தி உள்ளிட்ட மூன்று பேர் காயம் அடைந்தனர்.

இதுமட்டுமல்லாமல் சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களான குளிர்சாதன பெட்டி, மின்மோட்டார், டீ.வி, மின்சார அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இடி தாக்கியதில் சேதமடைந்து கிடக்கும் பொருட்கள்
இடி தாக்கியதில் சேதமடைந்து கிடக்கும் பொருட்கள்

இதேபோல் நல்ல விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான கண்ணு (60) என்பவர் வயலில் வேலைச் செய்துக் கொண்டிருந்த போது இடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.

அவரையும் சக தொழிலாளிகள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடி தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவர்கள்

இதையும் படிங்க:பெரம்பலூரில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு

Intro:சீர்காழி அருகே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் இடிவிழுந்தும் மின்னல் தாக்கியும் நான்கு பேர் படுகாயம்.மின்சாதன பொருட்கள் வெடித்து சேதம் கொள்ளிடம் போலிசார் விசாரணை:-
Body:வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.இன்று காலை முதல் நாகை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே மேலவல்லம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி(55)என்பவரின் வீட்டின் மீது இடி விழுந்தது.இதில் சுந்தரமூர்த்தி,அவரது மனைவி எழிலரசி,மகள் நிஷாந்தி உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்து மயங்கி விழுந்தனர். வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி, மின்மோட்டார்,டீ.வி.மின்சார அடுப்பு உள்ளிட்ட அனைத்து மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறியது.சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு மருத்துவணையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சேதம்.இதேபோல் நல்ல விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணு(60)என்பவர் வயலில் விவசாய வேலையில் ஈடுப்பட்டிருந்தார்.அப்போது அவர் மீது போது மின்னல் தாக்கியதில் படுகாயடைந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 வாகனம் மூலம் சீர்காழி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். நான்கு பேரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகவலறிந்து வந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி நேரில் ஆய்வு செய்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.