ETV Bharat / state

மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நகர செயலாளர் வெட்டிக்கொலை... - Arrest

மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 18, 2022, 7:38 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன்(31). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து தொழில் செய்து வந்தார். மேலும், மயிலாடுதுறை முன்னாள் வன்னியர் சங்கநகர செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர்.

இவருக்கும் கலைஞர் காலணியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதனால், கதிரவன் கண்ணன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதால், கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்தார்.

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி ஊருக்கு வந்த கண்ணன், நேற்று நள்ளிரவில் நல்லத்துக்குடி ரஞ்சித்(19), டபீர் தெரு திவாகர்(22). ஆகியோருடன் இரு சக்கர வாகனங்களில் கடைவீதிகளில் உலா வந்துள்ளனர்.

பின் வீட்டுக்கு திரும்பும்போது புதிய பேருந்து நிலையம் அருகே வழிமறித்த கலைஞர் காலனியை சேர்ந்த அஜித், திவாகர், கதிரவன் மற்றும் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதை பார்த்து கண்ணனுடன் வந்த ரஞ்சித் மற்றும் திவாகர் தப்பி ஓடியுள்ளனர்.

அதனையடுத்து அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தப்பிக்க முயற்சி செய்த கண்ணனை விரட்டிச் சென்று கழுத்து தலை மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து அதில் ஈடுபட்ட அஜித், திவாகர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கும்பலை தேடி வருகின்றனர். கொலை நடந்த போது கண்ணனுடன் வந்த டபீர் தெரு திவாகரை போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டிக்கொலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறை ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்குத் தொடர்பான தீர்ப்பின் முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.