ETV Bharat / state

'வாவ் செம டேஸ்ட்' - பாரம்பரிய உணவு திருவிழாவில் வெளிநாட்டினர் - Foreigners participating in the traditional food festival

நாகை: தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Foreigners participating in the traditional food festival in NagaI
Foreigners participating in the traditional food festival in NagaI
author img

By

Published : Jan 21, 2020, 8:33 PM IST

Updated : Jan 21, 2020, 8:49 PM IST

நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தனியார் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இவ்விழாவில் 14 துறைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உணவுகளை தயார் செய்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

குறிப்பாக கம்பு, கேழ்வரகு, உளுந்து, சிவப்பு அரிசி, கோதுமை, காராமணி, திணை, சோளம், ராகி கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட பாரம்பரிய தானியங்கள், பருப்பு வகைகள், கீரை வகைகளை கொண்டு 200க்கும் மேற்பட்ட விதவிதமான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு உணவு வகையிலும் உள்ள நன்மைகள் குறித்து பார்வையாளர்களுக்கு மாணவ - மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

நாகையில் தனியார் கல்லூரி சார்பில் பாரம்பரிய உணவுத்திருவிழா

தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவ - மாணவிகள், பேராசிரியர்கள், வெளிநாட்டினர் பலர் கலந்துகொண்டனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஆசா என்பவர் உறியடி போட்டியில் கலந்துகொண்டது மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தியது. இயற்கை உணவு வகைகளை மாணவர்களே தயார் செய்வதற்கான ஆர்வத்தை உருவாக்குவதற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய உணவு திருவிழா இக்கல்லூரியில் நடத்தப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

ராஜீவ் கொலை வழக்கு: ஆறாவது முறையாக ஆஜராகும் முருகன்

Intro:பொறையாரில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் 14 துறை மாணவர்கள் பங்கேற்பு. வித விதமான உணவு வகைகளை தயாரித்து அசத்திய கல்லூரி மாணவ மாணவிகள். விளையாட்டு போட்டியில் மாணவர்களுடன் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு:-Body:நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள தனியார் கல்லூரியில் (டி.பி.எம்.எல் கல்லூரி) விலங்கியல்துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் 14 துறைகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உணவுகளை தயார் செய்து காட்சிபடுத்தியிருந்தனர்.
கம்பு, கேள்வரகு, உளுந்து, பயறு, சிவப்பு அரிசி, கோதுமை, கீரை வகைகள், காய்கறி வகைகள், காராமணி, திணை, சோளம், ராகி, கொள்ளுபோன்ற சிறுதானியங்கள் மற்றும் நவ தானியங்களைக் கொண்டு 200-க்கும் மேற்பட்ட விதவிதமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கருடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட பாரம்பரிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளையும் காட்சிபடுத்தியிருந்தனர். ஒவ்வொரு உணவு வகையிலும் உள்ள நண்மைகள் குறித்து பார்வையாளர்களுக்கு
மாணவ மாணவிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் வெளிநாட்டினத்தவர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மணியை சேர்ந்த ஆசா என்பவர் உரியடி போட்டியில் கலந்து கொண்டது மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தியது.
இயற்கை உணவுகள் மற்றும் நண்மைகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், இயற்கை உணவு வகைகளை மாணவர்களே தயார் செய்வதற்கான ஆர்வத்தை உருவாக்குவதற்காக ஆண்டுதோறும் பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரியில் நடத்தப்படுவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். Conclusion:
Last Updated : Jan 21, 2020, 8:49 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.