ETV Bharat / state

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் அஞ்சலி - folk artists union pays tribute to sp balasubramaniams death

மயிலாடுதுறை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி, அவர் பாடிய பாடலை பாடி அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அஞ்சலி

author img

By

Published : Sep 26, 2020, 7:42 AM IST

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நேற்று (செப்.25) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவப்படத்தின் முன்பு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்க செயலாளர் கிங்பைசல் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அதன் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களை அவர்கள் உருக்கமாக பாடினர்.

இதையும் படிங்க: எஸ்.பி.பி. உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.