ETV Bharat / state

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதல் - 5 பேர் படுகாயம்! - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி

தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த 5 மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- 5 பேர் படுகாயம்!

author img

By

Published : Feb 23, 2023, 8:24 PM IST

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்- 5 பேர் படுகாயம்!

மயிலாடுதுறை: தமிழ்நாடு மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், காசி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளனர்.

இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் 5 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்று கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக்கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்களுக்கு பொறையார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'என் மனைவியை பார்த்த பின்புதான் என் வாழ்வில் அடையாத உயரத்தை அடைந்திருக்கிறேன்'- மணமகன் நெகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.