ETV Bharat / state

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை

நாகப்பட்டினம்: அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அமைச்சர் , மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

fishermen
fishermen
author img

By

Published : Oct 31, 2020, 4:50 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெளியூர் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்க வலியுறுத்தி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது நாளாக தொடரும் இவர்களது போராட்டத்தில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்.31) வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் முன்னிலையில் மீன்வளத் துறை உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய மீனவர்கள் அமைச்சரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்

இச்சம்பவத்தால் 1 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீனவர்கள் சூழ்ந்ததையடுத்து காவலர்கள் உதவியுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியனும், ஆட்சியரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு புதுச்சேரி இடையே இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.