மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் சுருக்கு மடி வலை பயன்படுத்த அனுமதி கேட்டு பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுருக்கு மடி வலைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும், மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 21 வகையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு உள்ளிட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று (ஜூலை 18) இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயங்கி விழுந்த பெண்கள்
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போராட்டத்தை கைவிட மறுப்பு
தகவலறிந்து சென்ற காவல்துறையினர், மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மீன்வளத்துறை அலுவலர்கள் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை மீனவர்கள் தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து