தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல்.06) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மக்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இதற்கிடையில் நாகை அக்கரை பேட்டை, கீச்சாங்குப்பம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் நாகை துறைமுகம் வெறிச்சோடி காணப்படுவதுடன் 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நாகை மீனவர்கள் தாங்களே முன்வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது அனைவரது மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நாகைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்!