ETV Bharat / state

3 வருடமாக மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்... குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு! - தரங்கம்பாடி

தரங்கம்பாடியில் 3 வருடமாக மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம் நடந்தேறியுள்ளது. பள்ளியிலும் மாணவர்கள் பாகுபாடு காட்டுவதாக மீனவ குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

3 வருடமாக மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்... குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

author img

By

Published : Jun 7, 2022, 2:14 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், குட்டியாண்டியூரில் மீன் எடுத்து டிரான்ஸ்போர்ட் வேலை செய்து வருகிறேன். நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி குட்டியாண்டியூர் ஊர் பஞ்சாயத்தார்கள் அழைத்து என்னிடம் பேசினர்.

அப்போது சுரேஷ் என்பவர் எனக்கு தான் பணம்கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். இதற்கு பஞ்சாயத்தார் சொல்வதை நீ கேட்க வேண்டும் அதை மீறினால் அபராதம் விதிப்பதோடு ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதாக கூறினர். எனக்கு வரவேண்டிய பணத்தை கேட்டால் பஞ்சாயத்தில் நான் கொடுக்க வேண்டுமென்று கூறுகிறீர்களே என்று கூறி ஒப்புகொள்ளாததால் என் குடும்பத்தை 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டனர்.

3 வருடமாக மீனவ குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த அவலம்... குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

இதனால் எனது இரண்டு மகன்கள், ஒரு மகள் பள்ளிக்கு சென்றாலும் அருகில் யாரும் பேசாததால் மனவேதனை அடைந்துள்ளனர். இது குறித்து பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என்னை போன்று எங்கள் ஊரில் பல குடும்பங்களை மிரட்டி பஞ்சாயத்தார் வைத்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு விலக்கி வைத்துள்ளதால் எனது வாழ்வாதாரம் பாதித்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததை விலக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்கள் குடும்பத்தினரோடு தற்கொலை செய்துகொள்வதோடு வேறு வழிதெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கடவுளை கூட அபிஷேகம் செய்து ஏமாற்றிவிடலாம்: ஆனால்.. ' - பார்த்திபன் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.