கரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த ஐந்து மாதங்களாக வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால், காற்று மாசும் பெருமளவு குறைந்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் உத்தரவின்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மயிலாடுதுறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்திகள், மீட்புப்பணிகள் உபகரணங்களான லைஃப்பாய், லைஃப் ஜாக்கெட், மூச்சு கருவி, உயர்கோபுர மின்விளக்கு, மரம் அறுக்கும் கருவிகள், கான்கிரீட் கட்டர், கயிறுகள் உள்ளிட்ட இதர உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.