ETV Bharat / state

நாகையில் தீ விபத்து- வீடுகள் எரிந்து சேதம்

நாகப்பட்டினம்: பழைய புறவழிச்சாலை அருகே அமைந்திருந்த குடிசை வீடுகள் அனைத்தும் தீப் பற்றி எரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

author img

By

Published : Apr 9, 2021, 4:46 PM IST

நாகையில் தீ விபத்து
நாகையில் தீ விபத்து

நாகப்பட்டினம் பழைய புறவழிச்சாலை பகுதியில் அமைந்துள்ளது காட்டு நாயக்கன் தெரு. இப்பகுதியில் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (ஏப்.8) தையல் நாயகி என்கிற மூதாட்டி அங்கு இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு பணிகள் இன்று (ஏப்.09) நடைபெற்ற போது, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

அப்போது பட்டாசிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி அருகிலிருந்த குடிசை வீட்டில் விழுந்து, தீ பற்றி எரியத் தொடங்கியது. பிறகு காற்றின் வேகம் காரணமாக அந்த தீ மளமளவெனப் பரவி அருகிலிருந்த குடிசைகளுக்கும் பரவ தொடங்கின.

உடனே அருகிலிருந்தவர்கள், தீ விபத்து குறித்து நாகப்பட்டினம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற இரண்டு தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவா தொடங்கியதால் கீழ்வேளூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

மேலும் குடிசை வீடுகளில் கேஸ் சிலிண்டர் இருந்ததால், சுமார் 2 மணி நேரம் கழித்து தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், நகைகள், பணம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின.

நாகையில் தீ விபத்து

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பிறகு அவர்களுக்கான உணவு, தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தனர்.

இதையும் படிங்க: 12 சவரன் நகை, ரூ.50,000 திருட்டு: அடையாளம் தெரியாத நபர்களுக்கு வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.