தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஜூன்24) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் அறிவித்திருந்தார். இதையடுத்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
முன்னதாக இந்தக் கடையடைப்பில் சேம்பர் ஆப் காமர்ஸ் பங்கேற்கும் என்று அதன் அமைப்பின் தலைவர் சி.செந்தில்வேல் தெரிவித்திருந்தார்.
மயிலாடுதுறையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. சுபமுகூர்த்த தினமான இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் இறப்பு: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை