ETV Bharat / state

பாரம்பரிய நெல் ரகங்களின் ’காப்பான்’ - 1030 Missing Traditional Paddy Varieties

நாகப்பட்டினம்: இந்தியாவில் தொலைந்துபோன பாரம்பரியமிக்க 1,030 நெல் ரகங்களை குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய குடும்பத்தினர் மீட்டெடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

paddy
paddy
author img

By

Published : Jan 20, 2020, 8:51 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பரஞ்சோதி. இவர் அந்தப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறார். சித்த மருத்துவரான இவரது மூத்த மகன் சரவணகுமரன் இயற்கை, பாரம்பரியத்தின் மீது கொண்டிருந்த பற்று காரணமாக, தொலைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை அதன் மரபுத்தன்மை மாறாமல் மீட்டெடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களை தேடிச்சென்று முதற்கட்டமாக சுமார் 130 ரகங்களை மீட்டெடுத்து தனது வயலில் பயிரிட்டுள்ளார்.

paddy
நெல் வகைகள்

பண்டைய காலத்தில் இந்தியாவில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் இருந்ததாகவும், தற்போது அவற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே காணமுடிவதாகவும், தன் வாழ்நாளில் தன்னால் முடிந்தஅளவு தொலைந்துபோன நெல் ரகங்களை மீட்டு விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் கூறுகிறார் விவசாயி பரஞ்சோதி.

அசாம், ஒரிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தனது தேடலை விரிவுபடுத்தி, தற்போது 1,030 தொலைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். அத்தகைய நெல் ரகங்களைத் தனது இரண்டரை ஏக்கர் வயலில் பயிரிட்டு தற்போது அவைகள் கதிர்விட்டு ’ஆயிரங்காலத்துப் பயிர்’ என்ற பழமொழியை மாற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்களிலான நெற்பயிர் என அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார்.

paddy
பாரம்பரிய நெல் ரகங்கள்

இந்தியாவில் அதிகளவிலான விவசாயிகளின் தற்கொலை தன்னை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க தூண்டுகோலாக இருந்தது எனவும், விதைக்கப்படும் நெல் ரகங்களுக்கு உரம், பூச்சி மருந்து என எந்த ஒரு செலவினமும் செய்யாமல் இயற்கை சீற்றங்கள், வெள்ளம், பூச்சி தாக்குதல், என எந்தவித பாதிப்பும் ஆளாகாத பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்து "விதைப்போம் அறுப்போம்" என்ற கொள்கையுடன் இந்த பாரம்பரிய நெல்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்ப்பதே தனது லட்சியம் என்கிறார்.

தன்னுடைய இந்த முயற்சிக்கு அவரது மனைவி சிவரஞ்சினி, தந்தை பரஞ்ஜோதி, சகோதரன் பழனிவேல் என குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் முழுமனதோடு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு பற்றிய தொகுப்பு

தங்கத் தம்பா, சொர்ணமுகி, சொர்ணமல்லி, வாடன் சம்பா, புழுதிக்கார், செங்கல்பட்டு சிறுமணி, சொர்ணவாரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களையும், ஊட்டச்சத்துக்களையும் உடைய நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ள சரவணகுமரன், அரசு தன்னை ஊக்கப்படுத்தி வேளாண்மைத் துறை மூலம் உதவி புரிந்தால், மேலும் ஆயிரக்கணக்கான தொலைந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பேன் என உறுதியுடன் கூறுகிறார்.

இவரது ஐந்து ஆண்டுகால முயற்சியினை பாராட்டி வேளாண்மைத் துறை சார்பில் வருகின்ற குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டி பரிசளிக்க உள்ளனர். விவசாயம் செய்வதே தற்போது கடினம் எனக்கூறி விவசாயித்திலிருந்து மக்கள் விலகிவரும் நிலையில், இவரின் இந்த முயற்சி இளைஞர்களிடையே விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சீரிய முயற்சியாகும்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நெல் குறித்து விழிப்புணர்வு

Intro:script in wrap

tn_ngp_03_special_story_1000_paddy_variety_vis_7204630

Body:script in wrap

tn_ngp_03_special_story_1000_paddy_variety_vis_7204630

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.