ETV Bharat / state

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

நாகப்பட்டினம்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து, தப்படித்து, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்
author img

By

Published : Jan 2, 2021, 2:50 PM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜன.02) நடைபெற்றது.

போராட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், நாகை, திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, மத்திய அரசிற்கு தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, அழுகிய பயிர்களை கையில் வைத்து, தப்படித்தும், ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள்

விவசாயிகளின் எச்சரிக்கை:

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தாரை தப்பட்டைகள் அடித்து விவசாயிகள் பேரணியாக வருகை தந்தனர். அவர்களை, ஆட்சியர் அலுவலகம் முன்பு தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகம் முழுவதும் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புயல், வெள்ளம் மட்டுமின்றி சமீபத்தில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ள நாகை விவசாயிகள், விரைந்து நிவாரணம் வழங்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருக்காட்டுப்பள்ளியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.