ETV Bharat / state

'காவிரி நீர் சரியான நேரத்தில் திறக்கப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும்'

நாகப்பட்டினம்: ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் மீட்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

nagapattinam farmers
nagapattinam farmers
author img

By

Published : May 18, 2020, 6:36 PM IST

குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், தண்ணீர் திறப்பில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. அதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போனது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜுன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், 'முதலமைச்சர் குறிப்பிட்டது போல் ஜுன் 12ஆம் தேதி, காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டால், கரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும்' என நம்பிக்கைத் தெரிவித்தனர்.

மேலும் எட்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லாத காரணத்தால், குறுகிய கால விதை நெல்கள் தடையின்றி கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் எனவும்; மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்பின்படி நிவாரண உதவிகள் விவசாயிகளை வந்தடைய தமிழ்நாடு அரசு வழிவகைச் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'நிதியமைச்சரின் ரூ.1 லட்சம் கோடி அறிவிப்பு பட்ஜெட்டின் மாறுபட்ட வடிவம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.