மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கக்கோரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கரும்பினை கையில் ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு விவசாய சங்கத்தினர் கோரிக்கை
கரும்பு விவசாய சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விவசாய சங்க மாநில செயலாளரான காசிநாதன் கூறுகையில், "நான்கு ஆண்டுகளாக மூடியிருக்கும் சர்க்கரை ஆலையை இந்த ஆண்டு திறக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4000 என்று அறிவிக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வழங்காமல் இருந்த ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும்.
கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை நிறுத்த வேண்டும்" உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆலையை இயக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: 'தனியார் பள்ளியில் இதர கட்டணங்களை வசூலிக்க தடை விதியுங்கள்: ரவிக்குமார் எம்.பி'