நாகை மாவட்டத்தில் 51 கோடி ரூபாய் மதிப்பில் வெண்ணாறு பாசன பகுதி முதல் காவிரி கடைமடை பகுதிவரை குடிமராமத்து, தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இப்பணிகளில் முறைகேடு நடப்பதாகக் கூறி இன்று நாகை மாவட்ட பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், டெல்டா மாவட்ட பாசன பகுதியில் உள்ள தூர்வாரும் பணியை வெளிப்படைத் தன்மையோடு முறைகேடு இல்லாமல் தூர்வார வேண்டும் எனவும், நடைபெறும் தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க விவசாயிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை நாகை வெண்ணாறு பொதுப்பணித் துறை அலுவலக கோட்ட பொறியாளரிடம் விவசாயிகள் அளித்தனர்.
தூர்வாரும் இடங்களில் திட்ட விவரம், திட்ட மதிப்பீடு குறித்த பதாகைகளை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.