ETV Bharat / state

நிலம் கையகப்படுத்துவதை தொடர்ந்தால் தேர்தலை புறக்கணிப்போம் - விவசாயிகள் திட்டவட்டம் - ஆட்சியர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

நாகை: நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக குறைந்த விலையில் நிலம் கையகப்படுத்தபடுவதை கண்டித்து நாடாளுமன்றத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

நாகை விவசாயிகள்
author img

By

Published : Apr 1, 2019, 10:14 PM IST

விழுப்புரம் முதல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரையிலான என்.எச்.45 ஏ சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் வீடுகளுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 6 மட்டுமேவழங்கப்படுகிறது. எனவே தங்களின் விளை நிலங்களுக்கு மிகக் குறைந்த ரூபாய் வழங்கப்படுவதை ஏற்காத விவசாயிகள், கூடுதல் விலை வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்டப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும் உரிய விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என கடந்த 30ஆம் தேதி குறைந்த விலைக்கு நிலத்தை கையகப்படுத்தும்மத்திய மாநில அரசுகளை கண்டித்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய நில உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.

நாகை விவசாயிகள்

இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடுமுதலமைச்சர் வந்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை விளக்கிக்கொள்ளுமாறும், ஆட்சியர் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தரங்கம்பாடி வட்டாட்சியர் கூறியதால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் விவசாயிகள் இன்று ஆட்சியரை சந்திக்க வந்தனர். ஆனால் ஆட்சியர் விவசாயிகளை சந்திக்காமல் புறக்கணித்து சென்றதாகக் கூறப்படுகிறது.

எனவே, விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் மனுவாக அளித்தனர். முதலமைச்சர் எடப்பாடியின் சேலம் மாவட்டத்திற்கு மட்டும் சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சதுர அடி ரூபாய் 500 கொடுக்கும் தமிழக அரசு, இங்கு மட்டும் 6 ரூபாய் கொடுப்பதுஇப்பகுதி மக்களை வஞ்சிக்கும் செயல்.

எங்களை சந்திக்காமல் புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புறக்கணிப்போம் என்றும்,தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக செல்ல உள்ளோம் என்றும் கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Intro:அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, தங்களை சந்திக்காமல் புறக்கணித்து சென்றதாக மாவட்ட ஆட்சியர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு.

Body:அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு, தங்களை சந்திக்காமல் புறக்கணித்து சென்றதாக மாவட்ட ஆட்சியர் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு.

நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு குறைந்த விலையில் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறிவிப்பு.

விழுப்புரம் முதல், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரையிலான என் எச் 45 ஏ சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை கையகப்படுத்தப்படும் நிலம் மற்றும் வீடுகளுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூபாய் 6 மட்டும் வழங்கப்படுகிறது என்றும், மிக குறைந்த விலையில் வழங்கப்படுவதை ஏற்காத விளை நில விவசாயிகள், கூடுதல் விலை வழங்கு வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலுனம் உரிய விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என, கடந்த 30-ஆம் தேதி குறைந்த விலைக்கு நிலத்தை கையகப்படுத்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட காத்திருப்பு, செம்புருப்பு, கருவி, தலைச்சங்காடு, பூந்துறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய நில உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழக முதல்வர் வருவதே வந்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தை விளங்கிக்கொள்ளுமாறும், தான் 1.04.2019 அன்று ஆட்சியர் தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தரங்கம்பாடி வட்டாட்சியர் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, இன்று ஆட்சியரை சந்திக்க வந்தனர்.

ஆனால் அவர்களே ஆட்சியர் சந்திக்காமல் புறக்கணித்து சென்றதாக கூறும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் மனுவாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர்கள்,

முதல்வர் மாவட்டத்திற்கு மட்டும் சாலை விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சதுர அடி ரூபாய் 500 கொடுக்கும் அரசு, இங்கு மட்டும் 6 ரூபாய் கொடுப்பதே இப்பகுதி மக்களை வஞ்சிக்கும் செயல் எனவும், தங்கள் கோரிக்கைக்கு செவிமடுத்து தங்களை சந்திக்காமல் புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற விட்டால் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புறக்கணித்து, தங்களுடைய வாக்காளர் அட்டை ,குடும்ப அட்டை, உள்ளிட்ட அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, சொந்த நாட்டிலேயே அகதிகளாக செல்ல உள்ளோம் என வேதனை தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.