ETV Bharat / state

மின்சாரத்துறை அலட்சியம் - மின்கம்பி உரசி விவசாயி உயிரிழப்பு - farmer dies of electrocution in mayiladuthurai

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

farm land
farm land
author img

By

Published : Dec 17, 2020, 9:43 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பச்சை மாதானம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம் (50). இவர் தனக்கு சொந்தமான வயலில் வேலை செய்ய வழக்கம்போல சென்றுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பி அவரது தலையில் உரசியுள்ளது.

மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்ட வேலாயுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் புதுப்பட்டினம் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

வழக்குப்பதிவு

தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து புதுப்பட்டினம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விவசாயி உயிரிழப்புக்கு மின்சாரத்துறையினரின் அலட்சியம்தான் காரணமென அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மின் மாற்றியை சரிசெய்ய சென்ற ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.