ETV Bharat / state

அச்சுறுத்தும் கரோனா: ஜன்தன் வங்கி திட்டத்தில் பயன்பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்! - நாகை விவசாயிகள்

ஜன்தன் வங்கி திட்டத்தில் நிவாரணமாக வழங்கப்படும் 500 ரூபாயைப் பெறுவதற்கு பல கிலோமீட்டர் பயணித்து மெனக்கெட வேண்டியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஜன்தன் வங்கி திட்டம்
ஜன்தன் வங்கி திட்டம்
author img

By

Published : Jul 31, 2020, 2:15 AM IST

Updated : Aug 2, 2020, 6:50 PM IST

நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்தபோது கிராமப்புற ஏழைகள் இலவசமாக வங்கிக்கணக்கைத் தொடங்க ஜன்தன் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தினை அனைத்துப் பகுதிகளிலும் அமல்படுத்த தொடர் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. குறிப்பாக, பிரதமர் மோடி இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என பெருமிதத்துடன் கூறினார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் இத்திட்டத்தில் ஜன்தன் வங்கிக்கணக்கு குறித்த புள்ளிவிவரங்களை நிதியமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 36.06 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை 1 லட்சத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது. இந்த 36.06 கோடி வங்கிக்கணக்குகளில் 50 சதவிகித கணக்கை பெண்கள் வைத்துள்ளனர்.

மேலும், 28.44 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூபே ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜன்தன் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அரசின் மானியம், உதவித்தொகைகள் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

இந்தத் திட்டத்தின் முழுப் பயன்களையும் விவசாயிகள் பெற்றுக் கொண்டார்களா? அவர்களின் தேவைகள் நிறைவேறியதா? வயல்களை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று கேட்டோம்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தமிழ்ச்செல்வன் கூறுகையில், “படிப்பறிவு இல்லாத விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கு வாங்கிக் கொடுத்த ஜன்தன் வங்கி திட்டம் வரவேற்கக்கூடியதுதான். இந்தக் கரோனா நெருக்கடியில் நிவாரணமாக மத்திய அரசு 500 ரூபாயை ஜன்தன் வங்கி கணக்கு மூலம் செலுத்திவருகிறது.

இந்த 500 ரூபாயை ஒரு கிராம விவசாயி பெற வேண்டுமெனில், அதற்குப் பாதி பணத்தைச் செலவளிக்கும் அளவுக்கு மெனக்கெட வேண்டியுள்ளது. நடமாடும் ஏடிஎம்கள் பெருநகரங்களில் காணப்படுகின்றன. ஆனால், அவை கிராமங்களுக்குத்தான் தேவைப்படுகின்றன.

மாநகராட்சியைத் தாண்டி நடமாடும் ஏடிஎம்களை கிராமங்களுக்கு குறைந்தபட்சம் ஒருநாளாவது அனுப்பிவைக்க வங்கிகள் முன்வர வேண்டும். இந்த நிவாரண நிதியை 500 ரூபாயாக இல்லாமல் கொஞ்சம் உயர்த்திக் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதனிடையே, ஒரு சில வங்கிகள் விவசாயக் கடன், குழுக் கடன் உள்ளிட்ட சில காரணங்களுக்காக இந்தப் பேரிடர் காலத்தில் ஜன்தன் திட்டத்தில் வழங்கப்பட்ட 500 ரூபாயைக் கூட பெற முடியாமல் விளிம்பு நிலை மக்களின் வங்கிக்கணக்குகளை முடக்கி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

ஜன்தன் வங்கி திட்டத்தில் பயன்பெற முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

இது குறித்து அரசு அலுவலர்களிடம் விசாரித்தபோது, "விவசாயக் கடன், குழுக் கடன் என எந்தக் காரணம் கொண்டும் வங்கிக்கணக்குகளை முடக்கக் கூடாதென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு புகார் வரும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அழுத்தமாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ரூ.1 லட்சம் கோடி இருப்புத்தொகையை எட்டிய ஜன்தன் வங்கிக் கணக்கு

Last Updated : Aug 2, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.