உலகப் புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் டி. ஏ. கலியமூர்த்தி. அவருக்கு வயது 72. மயிலாடுதுறை வட்டம், திருவாளப்புத்தூர் பகுதியில் பட்டமங்கல ஆராயத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர், 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1995 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது, 2008 ஆம் ஆண்டில் வலயப்பட்டி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். மயிலாடுதுறையில் அவரது உடலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இசை மேதைகள், இசை ரசிகர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவருக்கு வசந்தராணி என்ற மனைவியும், சண்முகநாதன், பாலாஜி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு மதிப்பில்லை - நளினி வழக்கில் மத்திய அரசு!