ETV Bharat / state

'ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கொடுங்க' - ஓ.எஸ். மணியன் - Former Minister O.S. Maniyan interview

நாகப்பட்டினம் : ஒவ்வொருவரும் ஆக்ஸிஜன் அளவை அறிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு பல்ஸ் ஆக்ஸி மீட்டரினை அரசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

author img

By

Published : May 25, 2021, 7:16 PM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலின் நிலை குறித்து முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'நாகையில் ஐந்து விழுக்காடு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதற்குச் சான்றாகும். எனவே, அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசித்தால் மட்டுமே களநிலவரம் தெரியும். உயிர் காக்க வேண்டிய பிரச்னையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாரபட்சம் காட்டக்கூடாது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூகப்பரவல் அதிகரித்துள்ளது. அதனைக் கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

குடும்ப அட்டைக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குவதைப் போல், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் ஒன்றும்; ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் வழங்க வேண்டும். மேலும் 108 சேவையை அதிகரிக்க வட்டார அளவிலான ஒருங்கிணைப்பை தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்த வேண்டும்.

தற்பொழுது கரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படுகிறது.

ஆனால், அதனை மறைத்து தமிழ்நாடு அரசு குறைவான எண்ணிக்கையை மட்டுமே வெளியிடுகிறது. மேலும் கரோனா தொற்றின் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூட அரசு தயங்குகிறது. ஊரடங்கை மேலும் கடுமையாக்கி, நோய்த்தொற்றை குறைக்க அதிதீவிர முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க : கிராமப்புறங்களில் தொற்றுப் பரவலை எப்படி தடுப்பது? விளக்குகிறார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.