நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகூர், அமிர்தா நகர், பிஎஸ்என்எல் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 207 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஜான்கென்னடி குடும்பத்தினரிடம் தமிழ்நாடு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், "அதிமுக தலைமையை ஏற்று, கட்சி கோட்பாடுகளுக்கு உட்படும் கட்சிகளுக்கு மட்டுமே கூட்டணியில் இடம் வழங்குவது குறித்து தலைமை பரிசீலிக்கும்.
தேர்தலுக்காக உதயநிதி ஸ்டாலின் விண்ணில் பறந்து பரப்புரை செய்தாலும், இம்முறையும் திமுகவுக்கு தமிழக மண்ணில் மாற்றம் கிடைக்காது" என்றார்.
இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது - முதலமைச்சர் பெருமிதம்!