நிவர் புயல் தீவிர புயலாக மாறி நில பரப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயலானது புதுச்சேரி மாநிலம் காரைக்கால், தமிழ்நாடு பகுதியான மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபட நாகப்பட்டினம் வந்துள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளான தலைஞாயிறு, தரங்கம்பாடி மற்றும் சீர்காழி பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகம் வருகிறது ராணுவம்!