மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கெளதமன் தலைமையில், முன்னாள் அமைச்சரும், கீழ்வேளூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான மதிவாணன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மழை பெய்தும், குடை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க...விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் ராகுல்